சில பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு..! கல்வி அமைச்சு
ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ அறிவித்துள்ளார்.
ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று வழமைப் போல் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மத்திய மாகாணத்தில் 111 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 524 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 5 பாடசாலைகளும் திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலை
பதுளை மாவட்டத்திலேயே அதிகளவான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, மஹியங்கனை கல்வி வலயத்தில் 3 பாடசாலைகளும், பிபிலை வலயத்தில் ஒரு பாடசாலை.
மற்றும் பசறை வலயத்தில் 88 பாடசாலைகளும், பதுளை வலயத்தில் 112 பாடசாலைகளும், வியலுவ வலயத்தில் 70 பாடசாலைகளும், வெலிமடை வலயத்தில் 110 பாடசாலைகளுக்கு, பண்டாரவளை வலயத்தில் 140 பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், திறக்கக்கூடிய நிலையில் உள்ள அனைத்து பாடசாலைகளையும், நிலைமையை ஆராய்ந்ததன் பின்னர் நாளை தினம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தரம் 11 மாணவர்களுக்கு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கான பயிற்சியாக அமைவதால், அந்த மாணவர்களுக்குப் பொருத்தமானவாறு 2026 ஜனவரி மாதத்தில் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்