உக்ரைன் களமுனைக்கு அனுப்பப்படும் பயங்கர ஆயுதங்கள்
உக்ரைன் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்ற ரஷ்ய படையினர் மீது எப்படி அதிரடித் தாக்குதலை நடத்துவது? அவர்களை எப்படி சுற்றி வளைப்பது? எப்படி அவர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்துவது? ரஷ்ய படையினர் பயணம் செய்யும் கவச வாகனங்களை எவ்வாறு தாக்கி அழிப்பது? இப்படியான பயிற்சிகளை அண்மையில் படையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட உக்ரைனிய வீரர்கள் மேற்கொள்கின்ற காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
ஆனால் உக்ரைனிய வீரர்களுக்கான இந்தப் பயிற்சிகள் உக்ரைனில் நடைபெறவில்லை. மாறாக பிரித்தானிய மண்ணில் தான் இந்தப் பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
புதிதாக படையில் தம்மை இணைத்துக்கொண்ட பத்தாயிரம் உக்ரையினர்களுக்கு பிரித்தானியா பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருப்பதாகவும், இந்த வருட இறுதிக்குள் மேலும் 20 ஆயிரம் உக்ரைன் வீரர்களுக்கு தாம் தமது நாட்டில் வைத்து இராணுவ பயிற்சிகளை வழங்கப் போவதாகவும் பிரித்தானிய இராணுவம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் ஆறு மாத பயிற்சிகளை முடித்துக் கொண்ட ஒரு தொகுதி உக்ரைனிய வீரர்கள் விரைவில் உக்ரைனில் களமிறங்கி போரிடவுள்ளதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.
இதே போன்று பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து, நோர்வே போன்ற நாட்டு இராணுவங்களும் தமது நாடுகளில் உக்ரைனிய படை வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றன.
உக்ரைனிய படை வீரர்களுக்கு அமெரிக்கா வழங்கி வருகின்ற சிறப்பு பயிற்சிகள் ஜேர்மனியில் உள்ள அமெரிக்க படைத்தளங்களில் நடைபெற்று வருகின்றன.
பயிற்சிகள் மாத்திரமல்ல, பலவிதமான நவீன ஆயுதங்களையும் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் உக்ரைனுக்கு அள்ளி அள்ளிக் கொட்டிக் கொண்டும் இருக்கின்றன.
கிட்டத்தட்ட 47 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்களை அமெரிக்கா மாத்திரம் உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அண்மையில், உக்ரைன் கள முனைகளுக்கு வந்து சேர்ந்துள்ளதும், களமுனைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவைகள் என்று கூறப்படுவதுமான, ஒரு சில ஆயுதங்களைத்தான் இன்றைய உண்மையும் தரிசனம் நிகழ்ச்சியில் சுருக்கமாக நாம் பார்க்க இருக்கின்றோம்,