அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா!!
ரஷ்யா தனது போரின் ஒரு பகுதியாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியம் தொடர்பில் உலக நாடுகளிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய படைகள் அணு ஆயுத தாக்குதல்களை நடத்துவதற்கான போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் 70 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்தத் தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர்கொண்டு வருகிறது.
இதற்காக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆயுதம் மற்றும் நிதியுதவி உள்ளிட்ட ஆதரவும் வழங்கப்படுகிறது.
ரஷ்ய தாக்குதலால், இரண்டாம் உலக போருக்கு பின்பு 1.3 கோடி பேர் அகதிகளாக வெளியேறியும், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் உள்ளனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர்களாக உள்ள போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்த பால்டிக் கடல் பகுதியில், அணு ஆற்றலைக் கொண்ட கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை அனுப்பி பயிற்சி மேற்கொள்வதில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனை உறுதிசெய்யும் விதமாக, அண்மைய நாட்களாக அணு ஆயுதக் கிடங்குகளை திறக்க வேண்டும் என்று ரஷ்ய தொலைக்காட்சி அலைவரிசைகளில் கூறப்பட்டு வருகின்றமையால் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

