ரஸ்யாவிடம் இருந்து நான்கு கிராமங்களை மீண்டும் கைப்பற்றிய உக்ரைனிய இராணுவம்
Russo-Ukrainian War
United States of America
Russia
By Mohankumar
தென்கிழக்கு உக்ரைனில் ரஸ்ய துருப்புகள் மீது உக்ரைனிய படையினர் பெரும் தாக்குதல்களை நடத்திவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய இராணுவம் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் நடத்திய தாக்குதலில் ரஸ்ய இராணுவத்திடம் இருந்து நான்கு கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக அறிவித்துள்ள நிலையில் இன்று புதிய மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
கவச வாகனங்கள்
இந்த நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய 16 புதிய கவச வாகனங்கள் ரஸ்ய இராணுவத்தின் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சில சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இறுதியில் 60 க்கும் மேற்பட்ட பிராட்லி காலாட்படை போர் வாகனங்களின் முதல் தொகுதி உக்ரைனுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்