தோட்டங்களுக்குள் மறைந்திருந்த ரஷ்ய போர் வாகனங்கள் - துரத்தி துரத்தி தாக்கும் உக்ரைன் ட்ரோன்கள்( காணொளி)
ரஷ்ய படையினருக்கு தொடர்ந்தும் மோசமான அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன உக்ரைன் ட்ரோன்கள்.
இவ்வாறான மற்றுமொரு சம்பவம் கிழக்கு உக்ரைனிலுள்ள Zirkuni என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. தாங்கள் உக்ரைன் படைகளிடம் இழந்த இடங்களை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
உக்ரைன் படையினர் மீது தாக்குதலை நடத்த ஓரிடத்துக்குச் சென்று மறைந்திருந்த ஒரு ரஷ்யப் போர் வாகனம் மரங்கள் அடர்ந்த தோட்டம் ஒன்றிற்குள் சென்று பதுங்கியுள்ளது. அந்த வாகனத்தின் மீது நிற்கும் ரஷ்யப் படைவீரர்கள் சிலர் எப்படி மறைந்திருந்து தாக்குவது என திட்டமிடுவதைக் காட்டும் காட்சி வீடியோவில் வெளியாகி உள்ளது.
ஆனால், துல்லியமாக அந்தப் போர் வாகனத்தைக் கண்காணிக்கும் ட்ரோன் ஒன்று, குறி தவறாமல் அதைத் தாக்க, அந்தப் போர் வாகனம் வெடித்துச் சிதறி சின்னாபின்னமாகிறது.
அந்தப் போர் வாகனம் வெடித்துச் சிதற, அந்த இடத்தில் பயங்கரமாக தீப்பற்றி எரிவதை அந்த வீடியோவில் காணலாம்.அதற்குள் இருந்த ரஷ்ய வீரர்களுக்கு நடந்த கதி என்னவென்று தெரியவரவில்லை.
