தாய்நாட்டை காக்க வரிசை கட்டி நிற்கும் உக்ரைனியர்கள்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதை முறியடிக்கும் வகையில் தமது தாய்நாட்டை காப்பாற்றவும் நடைபெறும் சண்டையில் பதிவு செய்யும் அலுவலகங்களில் பெருமளவானோர் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேட்டோ படைகளிடமிருந்து கீயவ் மற்றும் உக்ரைனில் உள்ள பிற இடங்களுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தரையில் நேட்டோ படைகள் இல்லை. சண்டை என்று வரும்போது, உக்ரைனியர்களே சண்டையிடுகிறார்கள் என்று அதிபர் அடிக்கடி கூறியதை மக்களும் உணர்கிறார்கள்.
வெள்ளிக்கிழமை மாலை இவ்வாறான ஒரு அலுவலகத்தில் திறந்தவெளி முற்றத்தில் ஏராளமான ஆண்கள், தங்கள் கடவுச் சீட்டைக் காட்டி கைகளில் டேப்பை சுற்றிக் கொண்டு வருகிறார்கள்.
ஏறக்குறைய எந்த போர் அனுபவமும் இல்லை. இருப்பினும் அவர்களின் தெருக்களை, தங்கள் குடும்பங்களை, தங்கள் நாட்டைப் பாதுகாக்க தீர்மானத்தோடு வருகிறார்கள்.
