மகிந்தவின் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் வீடொன்றில் திருடி மாட்டினார்.
Sri Lanka Police
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
வீடொன்றில் நுழைந்து திருட்டு
உக்குவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து சுமார் 100,000 ரூபா பெறுமதியான சொத்துக்களை திருடிய சந்தேகத்தின் பேரில் உக்குவெல பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
உக்குவெல குரலவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட பிரதேச சபை உறுப்பினர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களில் மின்விசிறிகள், , தொலைக்காட்சிப் பெட்டிகள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் ஏனைய உபகரணங்களும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி