திருமலையில் எரிந்து தீக்கிரையான அதி சொகுசு பேருந்து!
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
By Independent Writer
திருகோணமலை - ஹபரணை வீதியில் அதி சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹதுரஸ்கட்டுவ பகுதியில் இன்று (11) அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளதாக ஹபரணை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினர் விசாரணை
பேருந்தில் சாரதியும் உரிமையாளரும் மாத்திரம் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் குறித்த இருவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்புள்ளை தீயணைப்புப் பிரிவினால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டுள்ள நிலையில் ஹபரணை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்