லெபனானில் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் ஏழு பாடசாலைகள் - கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐ.நா
லெபனானில் ஆயுதக்குழுக்களின் வன்முறைச் செயற்பாடுகளின் போது கடந்த மாதம் 07 பாடசாலைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதனை ஐ.நா வின் வெளிவிவகார அலுவலகம் கடுமையாக எதிர்ப்புகளை வெளியிட்டு வருகிறது.
இதேபோல் பாலஸ்தீன நாட்டிலும் அடிக்கடி உள்நாட்டு கலவரங்கள் நிலவி வருகின்றது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் கலவரத்தால் அண்டை நாடான லெபனானில் அகதிகளாக தஞ்சம் அடைந்த வண்ணம் உள்ளனர்.
லெபனானிலுள்ள மிகப்பெரிய பாலஸ்தீன அகதிகள் முகாமான ஐன் அல்-ஹெல்வேயின் மீதும் ஆயுதம் ஏந்திய குழுவினர் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கல்வி பாதிக்கப்படும்

இது போன்றதொரு வன்முறையின்போதே கடந்த மாதம் 7 பாடசாலைகளை ஆயுதக்குழுவினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு பாடசாலையையும் அவர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. விவகார அலுவலகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதனால் உடனடியாக அந்த பாடசாலைகளை விட்டு வெளியேறுமாறும் ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.