உக்ரைன் மீதான போர் - அவசரமாக கூடுகிறது ஐ.நா பொதுச்சபை
russia
ukraine
war
un
By Sumithiran
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் பற்றி விவாதிப்பதற்காக, ஒரு அவசர சிறப்பு அமர்வுக்காக ஐ.நா.பொதுச்சபை, அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் இன்று கூடுகிறது.
193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 22 நாடுகளின் வேண்டுகோளையடுத்து இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த அமைப்பின் கூட்டம் கடந்த மாதம் 28-ம் திகதி முதல் மார்ச் 2-ம் திகதி வரை நடந்ததும், அப்போது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக பெரும்பான்மை உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றியதும் நினைவுகூரத்தக்கது.
இப்போது உக்ரைன் மற்றும் பிற உறுப்பு நாடுகளால் ஒரு வரைவுத்தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு, அது சுழற்சிக்கு விடப்பட்டுள்ளது என்று ஐ.நா.பொதுச்சபை தலைவரின் செய்தி தொடர்பாளர் பாலினா குபியாக் கிரேர் தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி