ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தமிழ்தேசியக் கட்சிகள் பகிரங்க கோரிக்கை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளன.
அதன்படி, கடந்த கால கடத்தல்கள், காணாமல் போனோர் விவகாரம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் இலங்கை அரசின் மீது ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் வலுவான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் சார்ந்த விடயங்களில் அரசாங்கம் காட்டும் அலட்சியப் போக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதை தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், காணாமல் போனோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதில் அரசு தொடர்ந்தும் தாமதம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதிக்காக காத்திருப்பதாகவும் தமிழ்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஆகவே இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிப்பதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening