வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசி
பணவரவுக்கு குறை இருக்காது. ஆனால், அவ்வப்போது சிறுசிறு குழப்பங்களின் காரணமாக சற்று சோர்வாகக் காணப்படுவீர்கள். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படுத்துவதாக இருக்கும். சிலருக்கு வெளிமாநிலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் அதனால் பதவிஉயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள்.
கடக ராசி
பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வந்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.
சிலருக்கு நண்பர்களுடன் வெளியூர்ச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சிக்கவேண்டாம்.
அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தரும்.
சிம்ம ராசி
வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். செலவுகளைச் சமாளிப்பதற்கேற்ப பணவரவும் இருக்கும் என்பதால் உற்சாகமாக இருப் பீர்கள். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.
பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்ப வர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக்கான அழைப்புக் கடிதம் வரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening