பேராசிரியர் ரவீந்திரநாத் படுகொலை விசாரணையை மையப்படுத்திய ஐ.நா அறிக்கை
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் படுகொலை மற்றும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இலங்கையின் நடவடிக்கை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையகம் கவனம் செலுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் இரண்டாம் நாளான நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், பிரதி உயர்ஸ்தானிகர் அவா டபோவால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் இலங்கை தொடர்பான மானித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் 16 பக்கங்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
நல்லிணக்கத்தை உள்ளடக்கிய சீர்த்திருத்தமே தொடர்கிறது! ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் இலங்கை சுட்டிக்காட்டு
பொறுப்புக்கூறல் உறுதி
இதன்படி பின்வரும் விடயங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. “ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை.

முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைகின்றன. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி இன்னமும் பதிலின்றித் தொடர்கிறது.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மற்றும் சமத்துவமின்மை என்பவற்றை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் தற்போதைய அரசாங்கத்துக்கு வலுவான மக்களாணை வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு
அவரது விஜயத்தின் பின்னர் சுமார் ஒரு மாதகாலத்துக்குள் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது இலங்கையில் மனித உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

அதேபோன்று நாட்டில் இனவாதத்துக்கு எவ்வகையிலும் இடமில்லை என்றும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கூற்று தொடர்பில் வரவேற்கத்தக்கது.
இருப்பினும் நாட்டில் ஆழமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டியிருக்கின்றது” என்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24