செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்! ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கையிழந்த தமிழர் தரப்பு
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் தமது ஒத்துழைப்பை வழங்க ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்குழு இணக்கம் தெரிவித்தாலும் அவர்கள் வழங்கிய வார்த்தைகளில் போதுமான திருப்திநிலை இல்லை என காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி யுவராச கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.
தூதுக்குழுவை செம்மணியில் வைத்து சந்தித்தவிடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல உதவுவதாக தூதுக்குழு தெரிவித்திருந்தாலும் அதற்கான தீர்வினை பெற்றுத்தருவதற்கான அதிகாரம் இல்லை என தங்களிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
போராட்டம்
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய விசேட தூது குழுவினர், செம்மணி மனித புதைக்குழியை பார்வையிடுவதற்காக விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஏ-9 வீதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்... 20 மணி நேரம் முன்