இலங்கையின் நெருக்கடி தொடர்பில் ஐ.நா அவதானம்
United Nations
Sajith Premadasa
Sri Lanka Economic Crisis
Samagi Jana Balawegaya
By Vanan
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை இன்று எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலவரத்திலிருந்து மீட்டெடுப்பது, அதற்குத் தேவையான மூலோபாய மற்றும் தந்திரோபாய ரீதியான ஆதரவைப் பெறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்