வீட்டுக்காவலில் கோட்டாபய - அநுரகுமார வெளியிட்ட பகீர் தகவல்
gotabaya
house arrest
Anura Dissanayake
By Sumithiran
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தலைமை அமைச்சரவையால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பாரிய போராட்டங்கள் காரணமாக இராணுவப் பிரிவுகளை தமக்கு நெருக்கமாகக் கொண்டுவர அரச தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜபக்ச குடும்பம் நாட்டை ஆள முடியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், ராஜினாமா செய்து நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அரசாங்கத்தை உருவாக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பேருவளையில் இருந்து கொழும்பு நோக்கிய மூன்று நாள் பாதயாத்திரையின் இறுதி நாளான இன்று கொழும்பு நகர மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி