போலி கடவுச்சீட்டு தயாரித்து வந்த அதிநவீன நிலக்கீழ் அலுவலகம் கண்டுபிடிப்பு
பன்னல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், வீசாக்கள் மற்றும் வெளிநாட்டு அனுசரணை கடிதங்கள் செயலாக்கப்படும் நிலக்கீழ் அலுவலகம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு நேற்று (20) கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல்துறை அதிரடிப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க குடிவரவுத் திணைக்களத்தின் எல்லை ஊடுருவல் பிரிவின் அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
அதன்படி, அந்த போலி அலுவலகத்தில் வெளிநாடுகளில் காணப்படும் அதி நவீன அச்சிடும் கருவிகள், பல்வேறு நாடுகளின் முத்திரைகள் மற்றும் நீர் முத்திரைகள் மற்றும் இலங்கை குடிவரவு திணைக்களத்தின் பல அதிநவீன இயந்திரங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு, அச்சக வேலையில் ஈடுபட்டிருந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதேவேளை, சந்தேகநபர்களும் அச்சகங்கத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கருவிகளும் கொழும்பு கிருலப்பனையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கடத்தல் புலனாய்வு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |