பிரான்ஸில் தலைமறைவாகியுள்ள முக்கிய புள்ளியை இலங்கைக்கு கொண்டுவர முயற்சி
Sri Lanka Police
Tiran Alles
France
By Sumithiran
பிரான்ஸில் தலைமறைவாக வாழ்ந்துவரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் தலைவருமான ஒருவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் சட்ட நடைமுறைப்படி அதற்கு சிறிது காலம் பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை
டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை அவ்வாறே அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆனால் அதற்கு காலம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையின் நடவடிக்கை தொடரும்
நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான காவல்துறையினரின் நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது என்றும் அது தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்