கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் மீட்பு!
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Erimalai
கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே நேற்று (23-01-2026) இக்குண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில், 60 மிமீ வெடிக்காத இரண்டு குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதையடுத்து, அவர்கள் இச்சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி காவல்துறையினர், குறித்த இடத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன் வெடிக்காத இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி