யாழ். கொட்டடி கடற்கரையில் இனம் தெரியாத சடலம் மீட்பு!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Independent Writer
யாழ்ப்பாணம் - கொட்டடி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்கள் இன்று (23) திங்கட்கிழமை குறித்த சடலத்தைக் கண்டுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், சடலத்தைப் பார்வையிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், கரையொதுங்கிய சடலம் தொடர்பான அடையாள விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி