மின்சார தடைக்கு முற்றுப்புள்ளி! வெளியான தகவல்
Srilanka
Colombo
Udaya Gammanpila
Power cut
Gamini Lokuge
By MKkamshan
அரச தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து மின்வெட்டை நடைமுறைப்படுத்த போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே ( Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியினால் கொழும்பு துறைமுகத்தில் உள்ள இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு 93 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
37,500 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 35,000 மெட்ரிக் தொன் பெட்ரோலைப் பெறுவதற்காக இந்தக் கொடுப்பனவு செலுத்தப்படவுள்ளது.
இதன்படி, நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும், இதனூடாக தடையற்ற மின்சார விநியோகத்தை மேற்கொள்ளமுடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
