தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Railways
By Raghav
நாடளாவிய ரீதியாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (30.10.2024) நள்ளிரவுடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் போக்குவரத்த நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் சஞ்சய ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பயணச்சீட்டு விநியோகம்
இன்று (30) மாலை 4.30 மணிமுதல் பயணச்சீட்டு விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகவுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
பல கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் தொடருந்து திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே நிலைய அதிபர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ மக்களின் வரலாற்றில் மறக்கவியலாத யாழ் இடப்பெயர்வு… 17 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்