அம்பிகை செல்வகுமாரை காப்பாற்றுங்கள்! பிரித்தானிய அரசிடம் கோரிக்கை
united kingdom
pazha
nedumaran
By Vasanth
இலங்கைத் தமிழர்களுக்காக பிரித்தானியாவில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரை காப்பாற்றுமாறு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு நியாயமான நீதியை வேண்டி, உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அம்பிகை செல்வகுமார் தனது அறவழிப் போராட்டத்தினை இன்றையதினம் 12ஆவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார்.
இருப்பினும் தனது உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு பிரித்தானிய அரச தரப்பிடம் இருந்து இதுவரையிலும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.