இனவாத ரீதியாக ரிஷி சுனக்கை சீண்டிய ரஷ்ய பத்திரிகை - குடிசைவாசிகள் என கடும் விமர்சனம்!

Sri Lanka United Kingdom Russian Federation Rishi Sunak
By Kalaimathy Oct 27, 2022 11:31 AM GMT
Report

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக்கை ரஷ்யாவின் பிரபல பத்திரிகை ஒன்று குடிசைவாசி என கேவலப்படுத்தியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிஷி சுனக் தொடர்பில் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் 16 புகைப்படங்களை இணைத்துள்ளது. அதுமட்டுமன்றி, ரிஷி சுனக்கின் தாத்தாக்கள் இருவரும் பிரிட்டிஷ் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பஞ்சாபியர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

ரஷ்யாவில் இருந்து வெளியாகும் பொருளாதாரம் தொடர்பான பத்திரிகை Kommersant, பிரித்தானிய அரசாங்கத்தின் முதல் கருப்பின பிரதமர் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

ரிஷி சுனக்கின் தந்தைவழி தாத்தா பாட்டியான ராம்தாஸ் மற்றும் சுஹாக் ஆகியோர் தற்போதைய பாகிஸ்தானில் அமைந்துள்ள குஜ்ரன்வாலா பகுதியில் பிறந்தவர்கள். இருவருமே ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர்கள் என்றே கூறப்படுகிறது.

தன்சானியாவில் குடியேற்றம்

இனவாத ரீதியாக ரிஷி சுனக்கை சீண்டிய ரஷ்ய பத்திரிகை - குடிசைவாசிகள் என கடும் விமர்சனம்! | United Kingdom Prime Minister Rishi Sunak Indian

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தான்சானியாவில் பஞ்சாபி இந்தியர்கள் வசித்து வந்த பகுதிக்கு குடியேறினர். தான்சானியாவில் தான் ரிஷி சுனக்கின் தாய்வழி தாத்தா பாட்டி ரகுபீர் மற்றும் ஸ்ரக்ஷா ஆகியோர் பிறந்துள்ளனர்.

இதில் ரகுபீர் புலம்பெயர்ந்தவர் என்பதுடன் ஸ்ரக்ஷா தான்சானியாவில் பிறந்தவர் எனவும் கூறப்படுகிறது. 1960களில் தமது திருமண நகைகளை விற்று பிரித்தானியாவில் குடியேறிய ஸ்ரக்ஷா, அதன் பின்னர் தமது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பிரித்தானியாவுக்கு வரவழைத்துக் கொண்டார்.

அந்தவகையில் பிரித்தானியாவுக்கு குடியேறியவர்கள் தான் ரிஷி சுனக்கின் பெற்றோரான யாஷ்வீர் மற்றும் உஷா தம்பதி. சவுத்தாம்ப்டன் பகுதியில் வசித்து வந்த யாஷ்வீர் மற்றும் உஷா தம்பதிக்கு 1980ல் ரிஷி சுனக் பிறந்தார்.

ரஷ்ய பத்திரிகை விமர்சனம்

இனவாத ரீதியாக ரிஷி சுனக்கை சீண்டிய ரஷ்ய பத்திரிகை - குடிசைவாசிகள் என கடும் விமர்சனம்! | United Kingdom Prime Minister Rishi Sunak Indian

யார்ஷ்வீர் அப்போது NHSல் பொது மருத்துவராக பணியாற்றி வந்தார். உஷா மருந்தகம் ஒன்றை நடத்தி வந்தார் எனவும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் Kommersant பத்திரிகை வெளியிட்ட அந்த கட்டுரையில், 2015ல் அரசியலில் களம் காணும் முன்னர் ரிஷி சுனக் செய்துவந்த பணிகள் குறித்தும் பட்டியலிட்டுள்ளது.

ரிஷி பெரும் கோடீஸ்வரர் என குறிப்பிட்டுள்ள அந்த பத்திரிகை, மொத்த சொத்துமதிப்பு 730 மில்லியன் பவுண்டுகள் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு எதிரான செயற்பாடுகளை பிரித்தானியா எடுத்திருப்பதாலையே குறித்த பத்திரிகை ரிஷி சுனக்கை இனவாத ரீதியாக சீண்டியுள்ளது.

இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புதிய பிரத்தானிய பிரதமரை வரவேற்றுள்ளதுடன், உதவிகள் தொடரும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026