முடிவிற்கு வருகிறது மிச்சேல் பச்லெட்டின் பதவிக்காலம் - ஏகமனதான தெரிவில் புதியவர்!
United Nations
Michelle Bachelet
Sri Lanka
Antonio Guterres
By Kalaimathy
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளராக ஒஸ்ரியா இராஜதந்திரியும் மூத்த ஐ.நா அதிகாரியுமான வெல்க்கர் ரேக்கை நியமிக்க ஐ.நா பொதுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது மனித உரிமைகள் ஆணையராக செயற்படும் மிச்சேல் பச்சலெட் பதவிக்காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பதவிக்கு வெல்க்கர் ரேக்கின் பெயரை ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பரிந்துரை செய்திருந்தார்.
ஒருமித்த கருத்துடன் புதிய ஆணையாளர் தெரிவு
இதற்கு 193 உறுப்பினர்களைக் கொண்ட சபை ஒருமித்த கருத்துடன் நியமனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த மனித உரிமைகள் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளதை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதாகவும் ஆழமான பொறுப்புமிக்க புதிய பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதாகவும் வெல்க்கர் ரேக் தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS
