சர்வதேசத்தின் பிடியில் வலுவாக சிக்கிக்கொண்டது சிறிலங்கா - நிறைவேறியது வாக்கெடுப்பு!

Human Rights Council United Nations Sri Lanka OHCHR
By Kalaimathy Oct 06, 2022 04:55 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானம் இன்று 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 20 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்ளாமை சர்வதேச ரீதியில் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

சர்வதேசத்தின் பிடியில் வலுவாக சிக்கிக்கொண்டது சிறிலங்கா - நிறைவேறியது வாக்கெடுப்பு! | United Nation Human Rights Session 51 Voted

அத்துடன், பிரான்ஸ், ஜேர்மன், நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை தயாரித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இடம்பெற்ற சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னரான நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் கருத்துவெளியிட்டிருந்தார்.

அதில் இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு பொறியின் கீழ் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இறையாண்மை கொண்டதொரு நாட்டில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றது எனவும், சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் தீர்வுகாண்பதே பொருத்தமானது எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026