ஜெனிவா விவகாரம்! இந்த நிலமைக்கு மஹிந்த ராஜபக்க்ஷவே காரணம் - ஐ.தே.க பகிரங்கக் குற்றச்சாட்டு

srilanka party
By Vasanth Mar 26, 2021 02:09 PM GMT
Report

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அவரது அரசாங்கம் அப்போதைய ஐ. நா சபை செயலாளருடன் உடன்படிக்கை செய்யாமல் இருந்திருந்தால், நாம் இன்று இந்த நிலைமைக்கு முகங்கொடுக்காமல் இருந்திருக்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எமது நாட்டு மக்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிற்கச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐ.தே.க. தலைமையாகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தம் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஐ. நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் 14 வாக்குகள் மாத்திரமே இலங்கை சார்பாக கிடைத்தன.

அயல் நாடுகளான இந்தியா, நேபாளம் போன்றவற்றின் ஆதரவைக்கூட இந்த அரசாங்கத்தினால் பெற முடியாமல் போயுள்ளது. அயல் நாடுகளுடன் சிறந்த வகையில் உறவுகளை பேண வேண்டும். 2009 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அவரது அரசாங்கம் அப்போதைய ஐ. நா. சபை செயலாளருடன் உடன்படிக்கை செய்திருந்தது.

அந்த ஒப்பந்தம் செய்யாமல் இருந்திருந்தால், நாம் இன்று இந்த நிலைமைக்கு முகங்கொடுக்காமல் இருந்திருக்க முடியும்.

எமது நாட்டு மக்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிற்கச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த உடன்படிக்கையின் மூலமாக எங்களின் பொறுப்புகளை உள்ளன பொறிமுறையொன்றின் மூலமாக செயற்படுத்வோம் என 2015 இல் ஆட்சி அமைத்தபோது நாம் உறுதியளித்தோம்.

சர்வதேச சமூகத்துடனான உறவுகள் மூலமாக, ஐக்கிய நாடுகள் சபையால் 2015 இல் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதாக நாம் உறுதியளித்தோம். ஐ.நா. மனித உரிமை பேரவையும் அதற்கான தமது பூரண ஆதரவை எமக்கு வழங்கியிருந்தனர்.

எமது நாட்டில் காணப்படுகின்ற நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக உள்ளக பொறிமுறை செயற்படுத்தியிருந்தோம்.

இதற்கு சர்வதேசத்தின் எந்தவொரு தலையீடும் இருக்கவில்லை. ஆனால் தற்போது அவ்வாறில்லை.

எமது நாட்டை மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு கொடுக்காது, எம்மை நாமே ஆட்சி புரியும் அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் போது இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2017 ஆம் ஆண்டு எமது ஆட்சி காலத்திலேயே நீக்கப்பட்டது.

இதன் பயனாக 2023 ஆம் ஆண்டு வரை ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எமக்கு கிடைக்கச் செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியே பிரதான காரணமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020