உலகளாவிய பொது நிதி மறுசீரமைப்பு குறித்து அதிபர் வலியுறுத்து
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, தேசம் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் அனைவருக்கும் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கையை நிலையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதாக உறுதியளித்தார்.
அங்கு, வறுமை மற்றும் பட்டினி நிலைகள் பல தசாப்தங்களில் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதாகவும், எனவே 2030 வாக்குறுதியுடன் முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
அத்துடன், காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற நெருக்கடிகள் இலங்கை போன்ற சிறு கடனாளி நாடுகளுக்கு காலநிலை முயற்சிகளை தொடர்வதற்கு தடையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதுடன், உலகளாவிய பொது நிதி அமைப்பை மறுசீரமைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அதிபரால், பொதுச் சபை அமர்வில் வலியுறுத்தப்பட்டது.