உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபை அவசரக் கூட்டம்!
உக்ரைன் விவகாரம் தொடர்பிலான அவர கூட்டம் ஐ.நா. பாதுகாப்பு சபையினால் நடாத்தப்படவுள்ளது.
அதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அல்பேனியா, அயர்லாந்து மற்றும் நோர்வே உள்ளிட்ட நாடுகள் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம் உக்ரைனில் இன்று மதியம் மூன்று மணியளவில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24 ஆம் திகதி தொடங்கிய யுத்தம் 22 ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிவரும் ரஷ்யப் படைகள் தலைநகர் கீவ்வை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
