அரசாங்கத்திற்கு சவால் விடும் ஐக்கிய மக்கள் சக்தி !
இந்த ஆண்டில் கூடிய விரைவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்திக் காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதேவளை நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்வியைத் தழுவும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச தலைவர் தேர்தலில் வெற்றியீட்டி, பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொண்டாலும் தற்பொழுது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளும் கட்சியில் இருப்பவர்களுக்கே இந்த விடயங்கள் புரிந்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தப்பட்டால் தோல்வியைத் தழுவ நேரிடும் என்ற காரணத்தினால் அரசாங்கம் தொடர்ச்சியாக தேர்தல்களை ஒத்தி வைத்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
