இரசாயன ஆயுதங்களை வெற்றிகரமாக அழித்தது அமெரிக்கா
"கையிருப்பில் இருந்த இரசாயன ஆயுதங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளது" என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி பிளிங்கன் கூறினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "கையிருப்பு இரசாயன ஆயுதங்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றோம் என்றார்.
இரசாயன ஆயுதங்கள்

ஏனென்றால், இந்தச் செயற்பாடானது நம்மை இரசாயன ஆயுதங்களின் கொடூரங்கள் இல்லாத உலகத்தினை நோக்கி அழைத்துச் செல்கின்றது என்கிறார்.
சர்வதேச அமைப்புகளினால் அறிவிக்கப்பட்ட பேரழிவை உண்டுபண்ணும் ஆயுதங்களின் முழு வகைகளையும் முதல் தடவையாக அமெரிக்கா அழித்திருக்கிறது என்பது எதிர்காலத்தின் அமைதியான உலக வாழ்க்கைக்கான தொடக்கமாகவே உள்ளது என அவர் கூறியுள்ளார்.
எம்.55 ரக ரொக்கட்டுகள்

அதுமாத்திரமல்லாமல், இரசாயன ஆயுத மாநாட்டின் படி, இரசாயன ஆயுதங்களை அகற்றுவதற்கு அமெரிக்காவிற்கு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிவரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு முன்னதாகவே அவர்களிடம் இருந்த கடைசி இரசாயன ஆயுதமான எம்.55 ரொக்கட்டுகளை கென்டக்சி பகுதியில் வைத்து அமெரிக்கா அழித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 4 மணி நேரம் முன்