அதிபருடன் சந்திப்பில் ஈடுபட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka
By Sathangani Oct 14, 2023 03:58 AM GMT
Report

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் மற்றும் அதிபர்  ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (13) அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விசார் ஆய்வுகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்துக்கொள்ளல் மற்றும் வருமானம் ஈட்டும் போது அறவிடப்படும் வரியிலிருந்து விடுவித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதெனவும், பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்த்து அனைத்து மக்களுக்கும் நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் ​நோக்கமெனவும் தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகளுடன் அதிபர் திடீர் சந்திப்பு

அரச வைத்திய அதிகாரிகளுடன் அதிபர் திடீர் சந்திப்பு


அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அதிபர்

மேற்படி கல்வி ஆய்வுகளுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தற்போதுள்ள சுற்று நிருபங்கள் ஊடாக போதிய ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை என்றும், தற்போதுள்ள வரி விதிப்புக்களிலிருந்து விடுப்பதற்கான சுற்று நிருபமொன்றை வெளியிடுவதற்கான இயலுமை தொடர்பில் தேடியறிந்து 03 வாரங்களுக்கு தனக்கு அறிக்கையொன்றை சமர்பிக்குமாறும் அதிபர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதிபருடன் சந்திப்பில் ஈடுபட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் | University Lecturers Association Meeting President

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை இரத்துச் செய்து பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளை கலினோனியா மற்றும் பீஜிங் பல்கலைக்கழக முறைமைகளுக்கமைய தயாரிப்பதற்கான இயலுமை தொடர்பிலான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இச் சந்திப்பில் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான அதிபரின்  சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி பரண ஜயவர்தன, செயலாளர் கலாநிதி அதுலசிறி சமரகோன் உட்பட சம்மேளத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த நரேந்திர மோடி

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த நரேந்திர மோடி

அதிபருடன் சந்திப்பில் ஈடுபட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் | University Lecturers Association Meeting President

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்