போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக இன்று (02) இந்த போராட்டத்தில் குதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் செயலாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
தீவிரப்படுத்த நடவடிக்கை
இதற்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வாரத்தில் இப்போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மை காலத்தில் பல்கலைக்கழக அமைப்பில் இருந்து கிட்டத்தட்ட 1,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை 2015 இல் சுமார் 25,000 ஆக இருந்ததில் இருந்து இன்று சுமார் 45,000 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |