போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாளை (09) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
கடுமையான நெருக்கடிகள்
அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள் தொடர்பில் தமது சங்கம் கடந்த வாரம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.

அரசுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை மற்றும் தகுதியான விரிவுரையாளர்கள் இல்லாமை என்பன கடுமையான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் கூறிய அவர், தற்போது 2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி புதிதாக 50 அரச பல்கலைக்கழகங்களை உருவாக்குவதாகக் கூறிய போதிலும், புதியவற்றை உருவாக்குவதற்கு முன்னர் தற்போதுள்ள 17 பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தமது சம்மேளனம் எதிர்பார்ப்பதுடன், இதற்கு நிலையான தீர்வு அவசியமானது என்றும் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23