இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பொதுமக்களுக்காக திறக்கப்படும் பல்கலைக்கழகம்!
University of Peradeniya
Sri Lanka
By Pakirathan
பேராதனை பல்கலைக்கழகம் ஜூலை முதாலாம் திகதி 80 ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகிறது.
அந்தவகையில் ஜூலை முதாலாம் திகதியை பொதுமக்களின் வருகைக்கான திறந்த நாளாக பிரகடனப்படுத்தி, பல்கலைக்கழகத்திற்கு பொதுமக்களை அனுமதிப்பதற்கு பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
திறந்த நாள் தினம்
இலங்கை வரலாற்றில் ஒரு பல்கலைக்கழகம் பொதுமக்களுக்காக திறந்த நாள் தினத்தை அறிவித்தது இதுவே முதல் முறையாகும்.
அந்தவகையில் பேராதனை பல்கலைக்கழக வளாகம், ஆய்வு நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் என்பவற்றை பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் ஜூலை 1 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்க நிருவாகம் தீர்மானித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்