வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஏமாற்றுவேலை அம்பலம்
அண்மைய ஆண்டுகளில் வெளிநாடு செல்வதற்காக ஏழு வருட விடுப்பு எடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் வெளிநாடு செல்லாமல், இலங்கையில் அமர்ந்து வேறு பணிகளைச் செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2020-2023ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாகத் தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க, அந்தந்த வருடங்களில் வெளிநாடு செல்வதற்காக விடுமுறை எடுத்தவர்கள் ஏழு பேரைத் தவிர வேறு எவரும் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வாரியாக
கொழும்பு பல்கலைக்கழகத்தில் 80, பேராதனையில் 41, ஜயவர்தனபுர 35, களனி 54, திறந்த பல்கலைக்கழகத்தில் 17, ருஹுணு பல்கலைக்கழகத்தில் 81 என 80 பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஏழு வருட விடுமுறை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |