புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துங்கள் : நாடாளுமன்றில் ஒலித்த குரல்
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை உடன் இரத்துச் செய்யுங்கள் என முன்னாள் அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கல்வி அமைச்சு மீதான நிதிஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
பரீட்சைஎழுத முடியாத நிலையில் வினாத்தாள்கள்
ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு எழுத முடியாத நிலையில் பிள்ளைகளுக்கு வினாத்தாள்கள் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
புலமைப்பரிசில் பரீட்சை இல்லாதொழிக்கப்பட வேண்டும்
உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ளது போன்று ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், தான் அதிபராக இருந்த காலத்திலும் அதனை நிறைவேற்ற முயற்சித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.