நாமலுக்காக களமிறங்கும் மகிந்தவுக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாமல் ராஜபக்ச கைது
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில், நடைபெறவுள்ள பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவிக்கின்றது.” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |