அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஐ.தே.க போராட்டம்!
UNP
People
Galle
SriLanka
Prostest
By Chanakyan
அரசாங்கத்திடம் பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்போவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இதன்படி நாளையதினம் பிற்பகல் 3 மணியளவில் நாட்டிலுள்ள அனைத்துப் பகுதி மக்களையும் இணைத்து காலிமுகத்திடலில் அமைந்துள்ள பேருந்து நிலைய தரிப்பிடத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தல் - அரசாங்க அதிகாரிகளுக்கான எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்குமாறும், கடன் வரையறையை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து இந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்