ஜே.வி.பியின் காணியில் பிரபல கட்சியொன்றின் அலுவலகம்! அரசாங்கத்திற்கு பகிரங்க சவால்
ஐக்கிய தேசிக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்த காணி ஜே.வி.பிக்கு சொந்தமானது என முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
குறித்த காணி ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரான சாந்த பண்டார சகோதரருக்கு உரித்தானது என்றும் ஜே.ஆர்.ஜயவர்த்தன பலாத்காரமாக கைப்பற்றியே சிறிகொத்தவை நிர்மாணித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், அரசாங்கத்தின் பலத்தை பயன்படுத்தி அதனை மீட்டு எடுக்க முடியாது என துமிந்த நாகமுவ என சவால் விடுத்துள்ளார்.
தாக்குதல்
யக்கல பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோஷலிச கட்சியின் அலுவலகத்திற்கு ஜே.வி.பியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் ஊடகங்களுகு இன்று கருத்து வெளியிட்ட துமிந்த நாகமுவ, “ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டத்தில் ரணிலுக்கு பயத்தில் வயிற்றாலை போக தொடங்கியதோடு போட்டவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசேட அதிரடிப்படை பாதுகாப்பு
எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான வில்சன் என்பவரை கால் மற்றும் கையை பிடித்து வீசியுள்ளனர்.மிகவும் வயதானர்.ஜே.வி.பினருக்கும் அவரை தெரியும். ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதை பிரதியமைச்சர் மகிந்த சமரசிங்க பார்த்து கொண்டிருந்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு இருந்தால் எங்களிடம் காட்டுங்கள்.அவ்வாறு ஒன்றும் இல்லை.நீதிமன்ற தீர்ப்பு ரில்வின் சில்வாவுக்கு ஏற்றாற் போல் கொடுக்கப்பட்டுள்ளதா?
இன்று எமது அலுவலகத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இரும்பு கேடர்கள் போடப்பட்டுள்ளது.நாம் இதை விட்டுக் கொடுக்க மாட்டோம்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
