விரைவில் இணையவுள்ள ரணில் மற்றும் சஜித் தரப்பு!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்களிடையே இன்று (24.01.2026) பிற்பகல் மற்றுமொரு விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அதன்படி, இந்த சந்திப்பின் நோக்கம், எதிர்காலத்தில் குறித்த இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான பரந்த ஒருமித்த கருத்தை எட்டுவதே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலின் 'கொழும்பு கிளப்பில்' மதிய உணவுக் கூட்டமாக குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
குறித்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எதிர்கட்சித் தலைவரின் மூத்த ஆலோசகர் லக்ஷ்மன் பொன்சேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Today, the SJB and the UNP held another round of successful discussions, which I am hopeful will result in a victorious conclusion.
— Sajith Premadasa (@sajithpremadasa) January 24, 2026
Ranjith Maddumabandara, Ruwan Wijewardena, Thalatha Athukorale, Navin Dissanayake, Akila Kariyawasam, and Sagala Ratnayaka participated in the…
ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, அகில விராஜ் காரியவசம், நவீன் திசாநாயக்க மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரு கட்சிகளின் உள்ளக வட்டாரங்களின்படி, இரு கட்சிகளின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது பல பயனுள்ள தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் உடன்பாட்டை எட்டுவதற்காக சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான முதல் கலந்துரையாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று இடம்பெற்றிருந்தது.
மேலும், இன்றைய சந்திப்பு தொடர்பான செய்தியில், கலந்துரையாடல்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்ததாகவும், கலந்துரையாடல்கள் வெற்றிகரமான முடிவுக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ “எக்ஸ்” தளத்தில் பதிவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |