அழைத்தது சீனா பறந்தனர் அரசியல்வாதிகள்
United National Party
Sri Lanka Podujana Peramuna
China
By Sumithiran
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது சீனாவிற்கு விஜயம் செய்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) அழைப்பின் பேரில் இந்த தூதுக்குழு சீனாவிற்கு வந்துள்ளதாக பெரமுன உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டு -யானை கூட்டு
இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தலைமையில் 10 சிறி லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும், அதிபர் ரணிலின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையிலான 5 ஐ.தே.க உறுப்பினர்களும் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.
"வறுமை ஒழிப்பு, கிராமப்புற மேம்பாடு, தனியார் ஈடுபாடு பற்றி நாங்கள் கற்றுக்கொள்கிறோம்" என்று ராஜபக்ச மேலும் கூறினார்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி