ஊழியர்கள் போதைப்பொருள் பாவனை - கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் கருத்து - அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்!
Colombo
Colombo National Hospital
By Pakirathan
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், அவரது அலுவலக வளாகத்தில் பலவந்தமாக தடுத்துவைக்கபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் ஊழியர்களால் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருசான் பெல்லன தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினால் வைத்தியசாலை வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
காரணம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் சிலர் அலுவலக நேரத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகத்தில் ஈடுபடுவதாக அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருசான் பெல்லன தெரிவித்திருந்தார்.
வைத்தியரின் குறித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டுள்ளர்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
