அநுர குமார மீது அசைக்க முடியாத நம்பிக்கை : என்கிறது ஈரோஸ்
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி சரியான வகையிலே நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஆணையினை அவர் பெறுகின்ற போது ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நிரந்தரமான ஒரு பொருளாதார அபிவிருத்தியினையும் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவார் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்)முன்னாள் பிரதித் தலைவர் திலிப்குமார் தெரிவித்தார்.
ஈழவர் ஜனநாயக முன்னணி பிரதித் தலைவர் திலிப்குமார் இன்று(01) மட்டக்களப்பில்(batticaloa) இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மறைத்து வைக்கப்பட்டுள்ள ஊழல் பணங்கள்
இலங்கை நாட்டிலே கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகளின் ஊழல் பணங்களாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணங்கள் வெளியில் வருகின்ற போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக் கூடியதாக இருக்கும்.
அது மாத்திரம் அல்லாமல் நிர்வாகம் மற்றும் சமூகத்தில் இருக்கக்கூடிய ஊழல்கள்கண்டறியப்படுவதோடு நிர்வாகத்தில் உள்ளவர்கள் பயந்து ஒரு ஒழுங்கான கட்டமைப்பிலே பயணிக்க தயாராகி வருகின்றனர்.
ஜனாதிபதி சரியான வகையில் நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்
நாட்டை நிர்வகித்து வரும் ஜனாதிபதியும் அவரது கட்சியும் சரியான வகையிலே நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது
நாடாளுமன்ற தேர்தலின் பின்பு மக்கள் ஆணையினை அவர்கள் மீண்டும் பெறுகின்ற போது நிரந்தரமான ஒரு பொருளாதார அபிவிருத்தியினையும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைகின்ற போது மக்கள் ஒரு சாதாரண வாழ்க்கைக்குள் கொண்டு சென்று ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவார் என நம்பிக்கை உள்ளது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |