"குடிநீரை இழக்கத் தயாரில்லை" அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த மலையக மக்கள்

Sri Lanka Upcountry People Nuwara Eliya Water
By Shadhu Shanker Mar 07, 2024 12:28 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

பல வருடங்களாக தாம் பயன்படுத்தும் நீரை இல்லாமல் செய்யும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுப்பதாக தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தோட்ட தமிழ் மக்கள் குழுவொன்று குற்றம் சாட்டுகின்றது.

தலவாக்கலை நகருக்கான குடிநீரை விநியோகத் திட்டத்தை விரிவாக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டினால், தாம் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்க நேரிடும் என தலவாக்கலை, கல்கந்தை தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கல்கந்த தோட்ட மக்கள் நீரைப் பெற்றுக்கொள்ளும் கல்லாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணையை மேலும் உயர்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை காரணமாக தோட்ட மக்களுக்கு நீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என கல்கந்த தோட்டத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் மோகன் தெரிவிக்கின்றார்.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டம்: பண்ணையாளர்களை சந்தித்த மூன்று நாட்டு தூதுவர்கள்

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டம்: பண்ணையாளர்களை சந்தித்த மூன்று நாட்டு தூதுவர்கள்

குடிநீரை இழக்கத் தயாரில்லை

“ஆரம்பத்தில் பழைய அணைக்கட்டுக்கு அருகில் கல் ஒன்றை உடைப்பதாக தெரிவித்தே பணிகளை ஆரம்பித்தார்கள். எனினும் பின்னர் ஒரு அடி உயரத்தில் இருக்கும் பழைய அணையை சுமார் ஐந்து அடிக்கு உயர்த்தி தோட்டத்திற்கு வரும் நீரை முழுமையாக இல்லாமல் செய்யும் வகையில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

"குடிநீரை இழக்கத் தயாரில்லை" அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த மலையக மக்கள் | Unwilling To Lose Drinking Water Srilankan Peoples

இந்த தோட்டத்தில் சுமார் 250 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 700 பேர் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் இதனால் பாதிக்கப்படப்போகிறார்கள்.” தலவாக்கலை, லிந்துலை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன்-கல்கந்த தோட்டத்தில் சுமார் 250ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதோடு, இவர்களில் சுமார் 30 குடும்பங்கள் விவசாயத்திலும் ஈடுபடுகின்றனர்.

ஒரு சில குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். தலவாக்கலை கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை மலை அடிவாரத்தில் ஆரம்பமாகும் (கல்லாறு) ஆற்று நீரையே இந்த தோட்ட மக்கள் குடிப்பதற்கும் விவசாய நடவடிக்கை உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

கல்வித்துறையில் இந்தியாவின் மற்றுமொரு சாதனை : ஏஐ ஆசிரியர் அறிமுகம்

கல்வித்துறையில் இந்தியாவின் மற்றுமொரு சாதனை : ஏஐ ஆசிரியர் அறிமுகம்

தோட்ட மக்கள்

தோட்ட நிர்வாகத்தினால் அமைக்கப்பட்டுள்ள இரண்டு நீர்த்தாங்கிகள் ஊடாக நீர் விநியோகம் இடம்பெறுவதாகவும் தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.

"குடிநீரை இழக்கத் தயாரில்லை" அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த மலையக மக்கள் | Unwilling To Lose Drinking Water Srilankan Peoples

இந்த நிலையில் குறித்த கல்லாறில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அணையை உயர்த்தி, தலவாக்கலை நகருக்கான குடிநீர்த் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணிகளுக்கு தோட்ட மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதுத் தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடம் மற்றும் தோட்ட அதிகாரிக்கு அறிவித்தபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மோகன் தெரிவிக்கின்றார்.

“இந்த பிரச்சினை குறித்து சிடபிள்யுசி தலைவர்களுக்கு எமது தோட்டத் தலைவர்கள் அறிவித்தனர். தோட்ட அதிகாரிக்கும் இதுத் தொடர்பில் தோட்ட மக்களால் அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.” தமக்கான குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து கல்கந்த தோட்ட மக்கள் பெப்ரவரி 27ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

 தண்ணீர் கிடைக்கும் வரை போராட்டம்

“போராடுவோம் போராடுவோம் தண்ணீர் கிடைக்கும் வரை போராடுவோம்,” “வேண்டும் வேண்டும் தண்ணீர் வேண்டும்.” “மறிக்காதே மறிக்காதே தண்ணீரை மறிக்காதே” போன்ற கோசங்களை எழுப்பியவாறு தோட்ட மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"குடிநீரை இழக்கத் தயாரில்லை" அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த மலையக மக்கள் | Unwilling To Lose Drinking Water Srilankan Peoples

2002ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் தலவாக்கலை நகர நீர் விநியோக வேலைத்திட்டம் என்ற பெயரில் கல்லாறு ஆற்றின் ஒரு பகுதியை மறித்து அணையிட்டு அங்கிருந்து குழாய்கள் ஊடாக தலவாக்கலை நகருக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

எனினும் இந்தத் திட்டத்தினால் கல்கந்தவத்தை தோட்ட மக்களுக்கான நீர் விநியோகத்தில் எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கும் தோட்ட மக்கள், கடந்த இரு தசாப்தங்களாக தடையின்றி தமக்கு நீரைப் பெற்றுக்கொள்ள முடிவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

அரசாங்கத்துக்கு  எதிராக கிளர்ந்த மக்கள்

எனினும், தற்போது தலவாக்கலை நகரின் நீர்த்தேவை அதிகரித்துள்ள நிலையில், மேலதிகமாக தண்ணீரை பெற்றுக்கொள்ளும் நோக்குடன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினூடாக ஆற்றின் அணையை மேலும் உயர்த்தி குழாய்களை பொருத்தும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

"குடிநீரை இழக்கத் தயாரில்லை" அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த மலையக மக்கள் | Unwilling To Lose Drinking Water Srilankan Peoples

இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும், முதலில் கல்கந்தவத்தை தோட்டத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்தத் திட்டத்தினால் தமக்கு குடிநீரைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என தோட்ட மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குடிநீராகவும், விவசாயம் மற்றும் ஏனைய தேவைகளுக்கும் கல்லாறு ஆற்றின் நீரையே இத்தனை காலமும் கல்கந்தவத்தை தோட்ட மக்கள் பயன்படுத்தி வந்துள்ளதோடு, நீரைப் பெற்றுக்கொள்ள வேறு வழிகள் ஏதும் அந்த மக்களுக்கு இல்லை என பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGallery
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011