சிங்களத்தில் “புத்தனின் அயோக்கியத்தனம்” என்ற நூலை எழுதியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
“புத்தனின் அயோக்கியத்தனம்” என்ற பெயரில் சிங்களத்தில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்ட சம்பவம் தொடர்பாக பிரபல சிங்கள மொழி ஆசிரியரான உபுல் சாந்த சன்னஸ்கல மற்றும் ஸ்ரீநாத் சத்துரங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி சம்பவம் தொடர்பாக விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள திலக்கரட்ன நேற்று முன்தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உபுல் சாந்த சன்னஸ்கல, கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்று வரும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கோட்டா கோ கம போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.
அத்துடன் அவர், நாட்டின் தற்போதைய அரசியல் முறைமைக்கு எதிராக இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை வெளியிட்டு வருபவர்.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றை அடிப்படையாக கொண்டு தற்போது நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
