கணவன் மாவீரர்..! மகனுக்கு இருதய பாதிப்பு - வாழ்வாதாரத்திற்காக கையேந்தும் இளந்தாய்
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது தான் இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சியின் நோக்கம்.
கடந்த 117 பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட முன்னாள் போராளி ஒருவரின் சகோதரியும், மாவீரரின் மனைவியுமான, முல்லைத்தீவு - கைவேலி, மருதமடு பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் புஷ்பவாணி என்பவரின் குடும்ப சூழலை தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
தனது மகனுக்கு இருதய நோய் இருப்பதாகவும், அவரது மருத்துவ சான்றிதழை பிறரிடம் காட்டி தர்மம் கேட்டு அவருக்கான மருத்துவ - கற்றல் செலவுகளை பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் - (பாகம் - 118)
இக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
WhatsApp / Viber - +94767776363 / +94212030600


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
