அமைச்சர்கள் மூவரை பதவி நீக்க அவசர கலந்துரையாடல்
அமைச்சரவைக் கூட்டம், அமைச்சரவை தீர்மானத்தை பகிரங்கமாக விமர்சித்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யுமாறு அரசதலைவரிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்திவருவதாக ஆளும் கட்சியை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில், அமைச்சரவை தீர்மானத்தை பகிரங்கமாக விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார ( vasudeva nanayakkara), விமல் வீரவன்ச (wimal weerawansa) மற்றும் உதய கம்மன்பில ( udaya gammanpila) ஆகியோரை நீக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வந்தவுடன் இதனை விளக்கமளிக்க, பின்வரிசை உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது - என்றுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்தை விமர்சிக்காமல் அமைச்சுப் பதவியை துறந்துவிட்டு, சமூகத்தில் எதனையும் கூற வேண்டும் என பின்வரிசை உறுப்பினர்கள் ஏற்கனவே பகிரங்கமாகத் தெரிவித்து வரும் நிலையில்,
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தல் உட்பட LNG கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிராக 11 அரசாங்கக் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் கடந்த 29ஆம் திகதி புறக்கோட்டையில் மக்கள் பேரவை கூட்டப்பட்டு அரசாங்கத்தை இவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
