அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடல் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்த ரணில்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறிலங்காஅதிபர் ரணில் விக்ரமசிங்க, தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் நிலவும் முரண்பாடுகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இன்று (06) அதிபர் செயலகத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக செய்திப் பணிப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தேர்தலுடன் நேரடியாக தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் ஏனைய அமைப்புகளின் அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அதிபர் அறிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு
மற்றும் முறையான ஏற்பாடுகள் குறித்து திட்டவட்டமான உடன்பாட்டிற்கு வந்து, அடுத்த திங்கட்கிழமை மீண்டும் அவருடன் கலந்துரையாட வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் தாம் நேற்று பிற்பகல் மீண்டும் கலந்துரையாடலை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அதிபர், அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடலை எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
