இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு! எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்
அவசர அறிவிப்பு
இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு அவசர அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
காலநிலை காரணமாக அனர்த்தங்கள் நிகழுமாயின் உடனடியாக 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
